சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடந்த
16-06-2024 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 – 8.00மணிவரை கொழும்பு -5 மயூராபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் ஶ்ரீ மயூராபதி அறநெறி பாடசாலை ஏற்பாட்டில் “யோகா பயிற்சி மற்றும் ஆன்மிகம்” என்ற தலைப்பிலான நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வத்தளை “ரிதமிக்” யோகா பயிற்சி நிலையம் உள்ளிட்ட ஏனைய சில யோகா நிலையங்களும் பங்கேற்றிருந்தனர்.
மயூராபதி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய திருமண மண்டபத்தில் இடம்பெற்ற இன்நிகழ்வை சுவாமி விவேகாநந்தா கலாசார மையம் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம் – கொழும்பு ஆகியோரின் அனுசரனையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வாகும்.
இதில் மாணவர்களின் யோகாசன செய்முறைகளும், மாணவர்களுக்கு பரிசில்களும் மற்றும் யோகாசன பயிற்சியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்









