கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு பிள்ளையாரடி அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
வழித்துணையாயிருந் தெமக்கு வழிகாட்டும் உமையம்மை திருமகனே
வரும் பகைமை, கொடுமைகளைத் தடுத்தருள வந்திடைய்யா
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு
நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும் விநாயகப் பெருமானே
பெருவீதி மருங்கினிலே கோயில் கொண்ட உமையம்மை திருமகனே
பெருநன்மை வளங்கள் தந்தருள வந்திடைய்யா
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு
நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும் விநாயகப் பெருமானே
பயணங்களில் உடனிருந்து காப்பளிக்கும் உமையம்மை திருமகனே
பங்கமில்லா நற்பயணம் தொடர வழி தந்திடவே வந்திடைய்யா
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு
நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும் விநாயகப் பெருமானே
நிம்மதியை தந்து காப்பளிக்கும் உமையம்மை திருமகனே
நிதானமாய் நம்பயணம் தொடர வழி தந்திடவே வந்திடைய்யா
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு
நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும் விநாயகப் பெருமானே
துணையிருந்து வழிநடத்தும் உமையம்மை திருமகனே
துன்பமின்றி நம்பயணம் தொடர வழி தந்திடைய்யா
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு
நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும் விநாயகப் பெருமானே
தொல்லை தடுத்தெமக்கு காவல் தந்து காத்தருளும் உமையம்மை திருமகனே
நிம்மதியாய் நம் பயணம் தொடர வழி தந்திடைய்யா
நம்பியுந்தன் தாள் பணியும் எங்களுக்கு
நலம் தந்து ஆதரிப்பாய் பிள்ளையாரடி உறையும் விநாயகப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.