தம்புத்தேகம பஸ் நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம உடுநுவர காலனியைச் சேர்ந்த (17) வயதுடைய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று (25) பிற்பகல் தம்புத்தேகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த வேளையில், பேருந்து நிலையத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவரிடம் போலி நாணயத்தாள்களை கண்டெடுத்துள்ளார்.
சந்தேக நபரின் தகவலின் அடிப்படையில் பொலிஸார் அவரது வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் இருந்து ஏராளமான போலி பணம் அச்சடிக்கும் கருவிகளை கைப்பற்றியுள்ளனர்.
