61 வயதான மலேசிய பிரஜை ஒருவர் நேற்று மாலை உனவட்டுன கடலில் நீராடச் சென்ற போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடலில் ஏற்பட்ட திடீர் நீரோட்டத்தினால் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் உயிர்காப்பாளர்களால் மீட்கப்பட்ட போதிலும், காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
