பலாங்கொடை தொரவல ஆற்றில் நீராட சென்ற பெண் ஒருவர் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று மாலை குறித்த ஆற்றிற்கு நீராட சென்ற சந்தர்பத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை முகுனுமலை பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று மாலை ஆற்றிற்கு நீராட சென்ற சந்தர்பத்தில் காணாமல் போனதை அடுத்த உறவினர்கள் பிரதேச மக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தர்பத்திலே குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.