இன்று காலை அத்துருகிரிய பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்தி வேன் புளத்சிங்கள-தெல்மல்ல பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதுரகிரிய மணிக்கூட்டு கோபுரப் பகுதியில் உள்ள பச்சை குத்தும் நிலையத்திற்கு இரண்டு T56 ரக துப்பாக்கிகளுடன் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் கிளப் வசந்த உள்ளிட்டோர் மீது சுமார் 27 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் தாங்கள் வந்த காரில் தப்பிச் சென்று பின்னர் கடுவெல கொரத்தோட்ட பகுதியில் வேனில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் வேனில் இருந்து வேறு காருக்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஷாக்சினி
