கொட்டாஞ்சேனை பல்பொருள் அங்காடிக்கு முன்பாக ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1 மில்லியன் ரூபா பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 14 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 1 மில்லியன் ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
85 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்வதற்காக கொள்வனவாளர் ஒருவர் கொள்வனவு செய்பவரை தேடியதாக கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த போதைப்பொருள் களஞ்சியமானது வெளிநாட்டில் மறைந்துள்ள போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு சொந்தமானது என சந்தேகநபர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஷாக்சினி