பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (09) நள்ளிரவு முதல் புகையிரத நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தால் பல புகையிரதங்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக பயணிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு கோட்டை வரை பல ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது. ரயில்வே சீசன் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளுக்கு இ.போ.ச பேருந்துகள் மூலம் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
