பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு சேவைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக புதிய விதிகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை தீர்மாளித்துள்ளது.
பாடசாலை காலங்களில் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை சீர்குலைக்கும் வகையிலும் சில குழுக்கள் மேற்கொள்ளும் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் திரும்பியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான அநீதிகளை தடுப்பதற்கு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
