2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் அவகாசம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான இணைய மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (10) நிறைடைய இருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் அது நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிக்கை விடுத்துள்ளது.
மேலும், 12 ஆம் திகதிக்கு பின்னர் விண்ணப்பிப்பதற்கான காலம் பிற்போடப்பட மாட்டாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
