கொழும்பு அவிசாவளை லோ லெவல் வீதியின் ரணால சுதவில பகுதியில் அரச மரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக அந்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பல மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வாவிலைச் சந்தி மற்றும் சியம்பலா கஸ் சந்தியிலிருந்து கனரக வாகனங்கள் செல்வதைத் தற்காலிகமாக நிறுத்தவும் பொலிஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
பொலிஸாருடன் அப்பகுதி மக்களும் இணைந்து கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.