தம்புள்ளையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.
அனைத்து பதாதைகளும், அலுவலகமும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த தாக்குதல் தொடர்பில் தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
