டுபாய்-கொழும்பு விமானத்தில் பயணித்த பலவினி என அடையாளம் காணப்பட்ட 57 வயதான இலங்கைப் பெண்ணின் உடல்நிலை திடீரென நடுவானில் மோசமடைந்ததால் விமான கேப்டன் உடனடியாக கராச்சி விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கி அவசர மருத்துவ உதவியை நாடியுள்ளார்.
விமானம் தரையிறங்கியதும், கராச்சி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மருத்துவர்கள் பலவினியை பரிசோதித்து அவர் இறந்ததை உறுதிபடுத்தினர்.விமானத்தின் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் இந்த இறப்பு சம்பவித்திருக்கலாம் என உறுதிபடுத்தியுள்ளனர்.
இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்த மத்திய சுகாதார அதிகாரி அந்த பெண்ணின் இறப்பு சான்றிதழை வழங்கினார். தேவையான சம்பிரதாயங்களை முடித்த பின்னர், அவரது உடலை ஏற்றிய அதே விமானம் கராச்சி விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.
மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
