துணுமல தோட்டம் நியன்துறுபொலவை சேர்ந்த ராம கிருஷ்ணன் சுதேஷ் என்பவரிடமிருந்து (PEGAKIN-150) ,(PREGABALIN) போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரை கைது செய்து பொலீஸார் நடத்திய விசாரணையிலிருந்து சசிந்த சசெல ரணசிங்க என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இரண்டாவது சந்தேக நபரிடமிருந்தும் இரண்டு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் வரகாபொல பிரதேசத்தில் பார்மசி ஒன்றிலில் விற்பனை செய்யப்பட்ட 8524 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பிட்ட போதை மாத்திரைகளின் பெருமதி சுமார் 17 லட்சம் ரூபாய் ஆகும் என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவலைப்பின் போது கேகாலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் ராஜபக்ஷ, பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர, சித்தாவகபுர பிரிவின் பதில் பொறுப்பதிகாரி, கலாபிடமட போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று சந்தேக நபர்களை வரக்காபொல நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய உள்ளதாக கலப்பிட்டமட பொலீஸார் தெரிவித்தனர்.
