சட்டத்தரணி அருணலக்சிரி என்பவர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதை தடுக்கவேண்டும் என கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றம் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எதிராக உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், நாடாளுமன்றத்தில் 19வது திருத்தம் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை, ஆகவே அது உரிய முறையில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கு சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
