கொழும்பில் ‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் பூதவுடல் பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை அங்கு வைக்கக் கூடாது என்றும் அப்படியிருந்தால் மலர்ச்சாலை வெடித்து சிதறும் எனவும் தொலைபேசி அழைப்பின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மீன்பிடி படகுகள் மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முற்படலாம் என புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மன்னார் முழுவதும் பல விசேட சோதனைச் சாவடிகள் மற்றும் வீதித் தடைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
