மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய எல்லைகள், நக்சலைட்களின் நடமாட்டம் உள்ளதால் இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன்படி, இந்தியாவில் அதிகமாக நடக்கும் குற்றம் மற்றும் பயங்கரவாதம் காரணமாக அங்கு சுற்றுலா செல்லும் அமெரிக்க பயணிகள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் எனவும் சிக்கிம்,அருணாச்சல பிரதேசம், அசாம், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலைநகரங்களுக்கு வெளியே எந்தப் பகுதிகளுக்குச் செல்லும்போதும் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
