பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) அறிவிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று (24) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் பாண் விலை குறைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் போனதாகவும் இருப்பினும் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
