எல்பிட்டிய பொலிஸாரால் குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்றிரவு எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுருத்தகம கரந்தெனிய பிரதேசத்தில் 3 வயதும் 6 மாதமும் ஆன ஆண் குழந்தை ஒன்று கொடூரமாக நடத்தப்படுவதாக 118 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கரந்தெனிய, அனுருத்தகம பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய சமையல்காரர் ஒருவரை எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரின் 24 வயதுடைய மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேக நபரும் குழந்தையும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.
சந்தேகநபர் குழந்தையை கொடூரமாக நடத்தும் வீடியோக்களை வெளிநாட்டு தாய்க்கு அனுப்பியதாகவும் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் அதனை பொலிசார் அவதானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
