வத்தளை – மாடாகொட பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் பரவிய தீ விபத்தில் 90 வயதான வாயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்த நபரின் வீட்டிலேயே தீ பரவியுள்ளதுடன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் தீ காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
