அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பொருளாதார நிபுணரான மொஹமட் யூனுஸ் பங்களாதேஷின் இடைகால தலைவராக பதவியேற்றுள்ளார்.
மக்கள் போராட்டம் காரணமாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து அந்நாட்டை விட்டே வெளியேறியுள்ள நிலையிலேயே, மொஹமட் யூனுஸ், பங்களாதேஷின் இடைகால தலைவராக பதவியேற்றுள்ளார்.
பதவியை ராஜினாமா செய்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தற்போது இந்தியாவில் அடைக்கலம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர் போராட்டத் தலைவர்களின் முக்கிய கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த, ஜனாதிபதி முகமது ஷஹாபுதீனால் யூனுஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.