Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

July 30, 2026

மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

July 30, 2026

மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

July 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கம்மை
வெளிநாடு

13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கம்மை

ThanaBy ThanaAugust 15, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

13 நாடுகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.

500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது.

இதன்படி, நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டு உள்ளது.

இவற்றில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்து உள்ளன.

இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் புது வடிவிலான வைரசானது பரவி வருகிறது.

காங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது.

எனினும், ஆப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி!-இலங்கைக்கு 10% வரி

    July 24, 2026

    ஜோர்தான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

    July 13, 2026

    நியூசிலாந்தில் முதியவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இலங்கை நபருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

    July 7, 2026

    வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம்: 32 பேர் பலி; சுனாமி எச்சரிக்கை!

    June 25, 2026
    Editors Picks

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026

    வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

    July 30, 2026

    இலங்கையின் கடன் தரவரிசையில் சிறப்பான முன்னேற்றம்

    July 30, 2026

    மாரவிலவில் 13 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது!

    July 30, 2026

    மின்னணு கட்டண அட்டை வசதியுடன் செப்டம்பர் 20 முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிப்பு

    July 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.