மேல் மாகாணம்- கொழும்பு மாவட்டம், அவிசாவளை புலக்பிட்டிய- அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் திருக்கோயில்
மேற்கிலங்கை எழுந்தருளி அருள் பொழியும் திருத்தாயே
மேன்மைமிகு வளவாழ்வை அளித்திடவே
வரவேண்டும், அருள்தர வேண்டும்
புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
அவிசாவளை பெருநிலத்தில் அமர்ந்தருளும் திருத்தாயே
அச்சமில்லா பெருவாழ்வை அளித்திடவே
வரவேண்டும், அருள்தர வேண்டும்
புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
காவல் தெய்வம் சூழ அமர்ந்தருளும் திருத்தாயே
கவலையண்டா வளவாழ்வை அளித்திடவே
வரவேண்டும், அருள்தர வேண்டும்
புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
சூலத்தைக் கையிலேந்தி அறம் பேணும் திருத்தாயே
சூழ்நிலையை நலமாக்கி வளவாழ்வை அளித்திடவே
வரவேண்டும், அருள்தர வேண்டும்
புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
தாயாக இருந்துலகைக் காக்கின்ற திருத்தாயே
தவறில்லா வளவாழ்வை அளித்திடவே
வரவேண்டும், அருள்தர வேண்டும்
புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா
அருள் தந்து ஆற்றல் தந்து ஆதரிக்கும் திருத்தாயே
அரவணைப்பைத் தந்து எமக்கு வளவாழ்வை அளித்திடவே
வரவேண்டும், அருள்தர வேண்டும்
புலக்பிட்டியில் கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.