கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் – மட்டக்களப்பு பிள்ளையாரடி அருள்மிகு விநாயகர் திருக்கோயில்

பெருவீதி மருங்கினிலே அமர்ந்தருளும் விநாயகர்
பெருந்துன்பம் அண்டாமல் என்றுமெம்மைக் காத்தருள்வார்
மட்டுமா நிலத்தினிலே காட்சி தரும்
எங்கள் விநாயகர் என்றும் துணையிருப்பார் நம்பித் தொழுதிடுவோம்

வரும் துன்பம் நீக்கிவிட அமர்ந்தருளும் விநாயகர்
வருத்தங்கள் அண்டாமல் என்று மெம்மைக் காத்தருள்வார்
மட்டுமா நிலத்தினிலே காட்சி தரும்
எங்கள் விநாயகர் என்றும் துணையிருப்பார் நம்பித் தொழுதிடுவோம்

வழித்துணையாய் காவல் செய்யும் விநாயகர்
விழித்திருந்து துணையிருந்து என்றுமெம்மைக் காத்தருள்வார்
மட்டுமா நிலத்தினிலே காட்சி தரும்
எங்கள் விநாயகர் என்றும் துணையிருப்பார் நம்பித் தொழுதிடுவோம்

தமிழ் ஒலிக்கும் திருநாட்டில் இருந்தருளும் விநாயகர்
தெளிவான மனம் தந்து என்று மெம்மைக் காத்தருள்வார்
மட்டுமா நிலத்தினிலே காட்சி தரும்
எங்கள் விநாயகர் என்றும் துணையிருப்பார் நம்பித் தொழுதிடுவோம்

துன்பங்கள் அகற்றி யென்றும் அருள் பொழியும் விநாயகர் துணிவு தந்து எமையென்றும் காத்தருள்வார்
மட்டுமா நிலத்தினிலே காட்சி தரும்
எங்கள் விநாயகர் என்றும் துணையிருப்பார் நம்பித் தொழுதிடுவோம்
உமையம்மை முதல் மகனாய் வந்துதித்த விநாயகர்
உறுதி தந்து எமையென்றும் காத்தருள்வார்
மட்டுமா நிலத்தினிலே காட்சி தரும்
எங்கள் விநாயகர் என்றும் துணையிருப்பார் நம்பித் தொழுதிடுவோம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.