வடமாகாணம்- மன்னார் மாவட்டம் மன்னார் – எழுத்தூர் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில்

அகிலமெங்கும் நிறைந்திருந்து அருள் வழங்கும் தாயே
அன்பு நிறை மனம் கொண்டு அணைத்தருள வருவாய்
நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள்
எழுத்தூரில் கோயில் கொண்ட தாயே அகிலாண்டேஸ்வரி போற்றி

தரணியெங்கும் அருள் பொழிந்து காத்தருளும் தாயே
தவறணுகா மனம் தந்து அணைத்தருள வருவாய்
நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள்
எழுத்தூரில் கோயில் கொண்ட தாயே அகிலாண்டேஸ்வரி போற்றி

மாசில்லா மனம் கொண்டு அன்பு செய்யும் தாயே
ஆதரவு தந்தெம்மை அணைத்தருள வருவாய்
நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள்
எழுத்தூரில் கோயில் கொண்ட தாயே அகிலாண்டேஸ்வரி போற்றி
பாசமுடன் அணைத்தருளும் அன்புநிறை தாயே
பரிதவியா நிலை தந்து ஆறுதல் வழங்கிடவே வருவாய்
நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள்
எழுத்தூரில் கோயில் கொண்ட தாயே அகிலாண்டேஸ்வரி போற்றி
நலமளித்து வளமளித்து ஆதரிக்கும் தாயே
நன்மைகள் தந்தெம்மை வழிநடத்த வருவாய்
நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள்
எழுத்தூரில் கோயில் கொண்ட தாயே அகிலாண்டேஸ்வரி போற்றி
ஆசி தந்து வாழ்த்தி யெம்மை வாழ்விக்கும் தாயே
அரவணைத்து வழிகாட்டி வழிநடத்த வருவாய்
நம்பியுன்னைச் சரணடைந்தோம் நாங்கள்
எழுத்தூரில் கோயில் கொண்ட தாயே அகிலாண்டேஸ்வரி போற்றி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.