ஊவா மாகாணம்- மொனராகலை மாவட்டம்- கதிர்காமம் கதிரமலை அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோயில்
கதிரமலை உச்சியிலே காட்சி தரும் சிவனே
கலக்கமில்லா நல்வாழ்வைத் தந்தருள்வாய் ஐயா
என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும்
கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே அருள்வாய்
கதிர்காமத் திருத்தலத்திலிருந்து எமைக்காக்கும் சிவனே
கதிரவனின் நல்லொளியை தந்தருள்வாய் ஐயா
என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும்
கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே அருள்வாய்
வெற்றிவேல் முருகனையே தந்திட்ட சிவனே
வெற்றி நிறை நல்வாழ்வைத் தந்தருள்வாய் ஐயா
என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும்
கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே அருள்வாய்
ஏழுமலை மத்தியிலே அமர்ந்திட்ட சிவனே
ஏற்றமிகு நல்வாழ்வைத் தந்தருள்வாய் ஐயா
என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும்
கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே அருள்வாய்
கந்தனவன் திருக்கோயில் அருகமர்ந்த சிவனே
காசினியில் நல்லுறவைத் தந்தருள்வாய் ஐயா
என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும்
கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே அருள்வாய்
பார் போற்றும் திருத்தலத்தில் இருந்தருளும் சிவனே
பெருமைமிகு நல்வாழ்வைத் தந்தருள்வாய் ஐயா
என்றும் உடனிருந்து எமைக் காக்க வேண்டும்
கதிரமலை கோயில் கொண்ட ஈஸ்வரனே அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.