மேல்மாகாணம்- கொழும்பு மாவட்டம்- கொழும்பு மாநகர் மருதானை- கப்பித்தாவத்தை அருள்மிகு கைலாசநாதர் சுவாமி சிவன் திருக்கோயில்
அருள் பொழிந்து அரவணைத்து ஆதரிக்கும் சிவனே
அன்பைச் செலுத்திவிடு அமைதியைத் தந்துவிடு
என்றும் உடனிருந்துவிடு அருளைத் தந்துவிடு
கப்பித்தாவத்தை இருந்தருளும் எங்கள் ஐயா சிவனே
கருணை கொண்டு அன்பு தந்து அரவணைக்கும் சிவனே
ஆணவத்தை நீக்கிவிடு ஆதரவைத் தந்துவிடு
என்றும் உடனிருந்துவிடு அருளைத் தந்துவிடு
கப்பித்தாவத்தை இருந்தருளும் எங்கள் ஐயா சிவனே
துணிவு தந்து ஆற்றல் தந்து வழிநடத்தும் சிவனே
துன்பமில்லா நல்வாழ்வைத் தந்துவிடு தெளிவான மனநிலையைத் தந்துவிடு
என்றும் உடனிருந்துவிடு அருளைத் தந்துவிடு
கப்பித்தாவத்தை இருந்தருளும் எங்கள் ஐயா சிவனே
வலிமைதந்து நேர்வழியில் வழி நடத்தும் சிவனே
வெற்றியைத் தந்துவிடு வீரத்தை ஊட்டிவிடு
என்றும் உடனிருந்துவிடு அருளைத் தந்துவிடு
கப்பித்தாவத்தை இருந்தருளும் எங்கள் ஐயா சிவனே
அறிவுதந்து நல்வழிப்படுத்தும் சிவனே
அச்சமின்றி வாழவழி தந்துவிடு நிம்மதியைத் தந்துவிடு
என்றும் உடனிருந்துவிடு அருளைத் தந்துவிடு
கப்பித்தாவத்தை இருந்தருளும் எங்கள் ஐயா சிவனே
குறைகளைந்து நலமளித்து வழிநடத்தும் சிவனே
குற்றமில்லா வாழ்வைத் தந்துவிடு கறைகளையும் போக்கிவிடு
என்றும் உடனிருந்துவிடு அருளைத் தந்துவிடு
கப்பித்தாவத்தை இருந்தருளும் எங்கள் ஐயா சிவனே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.