Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

August 28, 2026

நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

August 28, 2026

அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

August 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதிப்பு
Breaking

கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் 31 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதிப்பு

ThanaBy ThanaNovember 26, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
பசறை நிருபர்.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக பதுளை மாவட்டத்தில் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து பலத்த அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் லுனுகலை, ஹல்துமுல்ல, எல்ல, ஹாலிஎல, ரிதிமாலியத்த, பசறை, பதுளை, வெளிமடை, மீகாகிவுல, ஊவாபரணகம, மகியங்கன, பண்டாரவளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் 31 குடும்பங்களைச் சேர்ந்த 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர் பண்டாரவளை பிந்துனுவெவ பகுதியில் வீடொன்றின் மீது இன்று அதிகாலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த 61 வயது நிரம்பிய பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.
அனர்த்தங்களில் சிக்கி காயமடைந்த 5 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  மாவட்டத்தில் 31 வீடுகள் கடும் மழையினால் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.  அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கிய 5 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 3 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , மண்சரிவு அனர்த்தம்  காரணமாக சில வீதிகளின் போக்குவரத்திற்கும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தன.
பதுளை- பண்டாரவளை வீதியின் உடுவர 7 ஆம் கட்டைப் பகுதி, அப்புத்தளை- பெரகல வீதி, பதுளை- பசறை வீதியின் 3ஆம், 7ஆம் கட்டைப் பகுதிகள் , பதுளை- ஸ்பிரிங்வெலி வீதியின் கந்தனப் பகுதி, எல்ல- பசறை வீதி மற்றும் மடுல்சீமை – பசறை வீதியின் மெட்டிகாதென்னப் பகுதி என்பவற்றிலேயே இவ்வாறு மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன.
உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் . அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் அனைத்து தரப்பினருடனும் இணைந்து விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். மழை தொடரும் சாத்தியக்கூறுகள் நிலவுவதால் மாவட்டத்தில் அனர்த்தங்கள் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    யாவருக்கும் உறையுள்’ – சம்மாந்துறையில் மேலும் ஒரு குடும்பத்துக்கு புதிய வீடு.

    August 28, 2026

    நேபாள வெள்ளப்பெருக்கு-இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

    August 28, 2026

    அதி உயர் மின்னழுத்த மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான இரு மாணவர்கள் உட்பட மூவர் பத்திரமாக மீட்ட வட்டவளை பொலிசார்

    August 28, 2026

    நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்வு

    August 28, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.