Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நுவரெலியாவில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவன் கைது

August 29, 2026

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

August 29, 2026

நேபாள வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு! காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர ஈடுபாடு!”

August 29, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது!
இலங்கை

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது!

ThanaBy ThanaDecember 11, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது!
– அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன வகுஜன ஊடக அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ

ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் எதிர்காலத்திலோ அல்லது இந்த அரசாங்கத்திலோ இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது யுத்த காலப் பகுதியில் அதிகமான ஊடகவியலாளர்கள் ஜனவரி மாதத்தில் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்கள் எனவே அவர்களை நினைவு கூறும் நிகழ்வுகள் அடுத்த மாதத்தில் இடம் பெறவுள்ளன. எனவே அவர்களுக்கான நீதி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் கிடைக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார்.

தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அல்ல சிங்கள முஸ்லிம் சமூகம் சார்ந்த ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக நாம் கடந்த காலங்களில் கருத்துக்களை வெளியிட்டு இருந்தோம். ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் நிபந்தனைகள் இன்றி செயற்படும்.

கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளனலசந்த விக்ரமதுங்க படுகொலை தொடக்கம் படுகொலை செய்யப்பட்ட சகல ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன. நான் முன்னரும் ஊடக சந்திப்புகளின் போது இது தொடர்பாகத் தெளிவுபடுத்தியிருந்தேன். இந்த விசாரணைகள் கடந்த காலங்களில் மறைக்கப்பட்டிருந்தன. அதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் சேவையிலிருந்து இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள். அல்லது நாட்டை விட்டு வெளியே செல்லுமாறு வற்புறுத்திய நிலை காணப்பட்டது.

மேலும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்கள் தொடர்பான படுகொலைகள் மட்டுமல்ல ஊழல் தொடர்பான சகல விடயங்கள் குறித்தகுறித்த விசாரணைகளை மேற்கொண்டவர்கள் கூட நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.

நாம் அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பாக தேடிப் பார்த்தபோது பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் போன்றவற்றின் அறிக்கைகளின் பிரகாரம் இவ்வாறான குற்றங்களுடன் தொடர்பான ஆவணங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.

அதனால் நாம் அந்த செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து முறையாக மேற்கொண்டு வருகிறோம். ஊடக வியலாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகள் முறையாக செயல்படுத்தப்படுகின்றன என எனக்கு உறுதியாக கூற முடியும்.

அத்துடன் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் இதுபோன்ற ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல் எதுவும் எதிர்காலத்திலோ எமது எமது அரசாங்கத்திலோ இடம்பெறாது என எனக்கு தனக்கு உறுதியாக கூற முடியும் என அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான சுற்றுப்பயணம் இம்மாதம் 15 முதல் 17ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் இடம் பெறவுள்ளது. இதன் போது ஜனாதிபதி, இந்திய பிரதமர் உட்பட உயர் பீடத்தை சந்திப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இதற்காக ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் பிரதி நிதி அமைச்சர் ஆகியோர் செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தினார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நுவரெலியாவில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவன் கைது

    August 29, 2026

    கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

    August 29, 2026

    கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!

    August 29, 2026

    பூனாகலை, கபரகலை மண்சரிவினால் வீடுகளை இழந்த 50 குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயாபுரம்” வீட்டுத் திட்டம் ஜனாதிபதியினால் மக்கள் பாவனைக்கு

    August 29, 2026
    Editors Picks

    நுவரெலியாவில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவன் கைது

    August 29, 2026

    கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

    August 29, 2026

    நேபாள வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு! காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர ஈடுபாடு!”

    August 29, 2026

    கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!

    August 29, 2026

    நுவரெலியாவில் குடும்பத் தகராறில் மனைவி கொலை – கணவன் கைது

    August 29, 2026

    கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹரா வெற்றிகரமாக நிறைவுபெற்றமை பற்றி தெரிவிக்கும் ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

    August 29, 2026

    நேபாள வெள்ளப் பெருக்கில் பலி எண்ணிக்கை 579 ஆக உயர்வு! காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸார் தீவிர ஈடுபாடு!”

    August 29, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.