கமு /அல்-அஷ்ரப் மாகா வித்தியாலயம் மாவடிப்பள்ளி மாணவர்களுக்கு புதிய தலைமுறை கழகத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு.!
-(முஹம்மத் மர்ஷாத்)-
மாவடிப்பள்ளி கமு /அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் அதிபரின் ஆலோசனையின் கீழ் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கல்வியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் மாவடிப்பள்ளி பாடசாலையின் அதிபர் AL .றஜாப்தீன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
எஸ்.எம்.எம்.முஷரஃப் அவர்களின் அன்பளிப்பினை புதிய தலைமுறை கழகத்தின் மாவடிப்பள்ளி தொண்டர்களினால் பெற்றோர்களை இழந்த பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகுதி உபகரணங்கள் அதிபர், ஆசிரியர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் ,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது மாவடிப்பள்ளி கல்வி சமூகமும் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களும் இவ்வாறான உதவும் கரங்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
