Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

August 23, 2026

நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

August 23, 2026

மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

August 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இன்னும் 20 நாட்களில் இ.தொ.காவின் மறுசீரமைப்பு நடவடிக்கை – பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவிப்பு
உள்நாட்டு செய்திகள்

இன்னும் 20 நாட்களில் இ.தொ.காவின் மறுசீரமைப்பு நடவடிக்கை – பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவிப்பு

ThanaBy ThanaDecember 11, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

(க.கிஷாந்தன்)

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதெனவும், இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும், மறுசீரமைப்பு நடவடிக்கை ஜனவரியில் இடம்பெறும் எனவும் இ.தொ.காவின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

இன்று (11) மாலை கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.காவின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் கலந்துக் கொண்டு இதனை தெரிவித்தார்.

இன்று (11) முற்பகல் 12.00 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளர் எம்.ராமேஷ்வரன் ஆகியோர் தலைமையில் தேசிய சபை கூடியது.

இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் இதனை அறிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ கடந்த உள்ளாட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா ஐந்து சபைகளைக் கைப்பற்றியது. எனவே, இம்முறையும் உள்ளாட்சிசபைத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு வியூகம் வகுக்கப்படுகின்றது.

காங்கிரஸின் தனித்துவமான சேவல் சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்கப்படுகின்றது. கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் பேச்சு நடத்தப்படவில்லை.  அது பற்றியும் பரிசீலிக்கப்படுகின்றது.

இ.தொ.காவின் மறுசீரமைப்பு நடவடிக்கை விரைவில் இடம்பெறவேண்டும் என்ற தீர்மானம் தேசிய சபையில் எடுக்கப்பட்டது. இதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் அதற்குரிய நடவடிக்கை இடம்பெறும். நியமிக்கப்பட்ட குழு தனது பரிந்துரைகளை தேசிய சபைக்கு முன்வைக்கும். அதற்கமைய மறுசீரமைப்பு இடம்பெறும்.

காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்ட காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் முன்னெடுப்பது வரவேற்கதக்க விடயமாகும். இப்படியான அரசின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணியுடன் தனிவீடு அவசியம். மாடி வீடு திட்டத்தை நாம் எதிர்க்கின்றோம்.” – என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறல்: அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்

    August 20, 2026

    அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்*

    August 20, 2026
    Editors Picks

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026

    இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது

    August 21, 2026

    முச்சக்கர வண்டித் தொழிலுக்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த நடவடிக்கை – பிரதி அமைச்சர்

    August 23, 2026

    நுவரெலியாவில் சுற்றுலா பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு

    August 23, 2026

    மகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை!

    August 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.