ஊவா மாகாண முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சு என்பன இணைந்து முன்பள்ளித் தொடர்பான டிப்ளமோ மற்றும் தேசிய தொழிற் தகமை (NVQ) -4 இற்கான சான்றிதழ் – 2025/2026 ற்கான பாடநெறியை நடத்த உள்ளன.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் உட்பட 3 பாடங்களில் திறமை சித்தியுடன் (C) 6 பாடங்களில் சித்தியடைந்தோர் இப்பாடநெறிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை பணிப்பாளர், முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி அதிகார சபை, ஸ்டேஷன் வீதி, பதுளை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலதிக தகவல்களை 0552229522,0774194341, 0705559097 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.
