சமுத்திரவள்ளி அறநெறி பாடசாலையின் பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு விழா – 2023.
மெராயா தோட்ட சமூக சமய நற்பணி மன்றமும் ஆலய பரிபாலன சபையினரும் இணைந்து ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்வும் சமுத்திரவள்ளி அறநெறி பாடசாலையின் பதிவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் (05) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட கலாச்சார அலுவல்கள் திணைக்கள உத்தியோகஸ்தர் ஸ்டீபன் அவர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர் கமல் அவர்களும் மெராயா தோட்ட குமாஸ்தா மற்றும் தங்கக்கலை தோட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டதோடு பெற்றோர்கள் அறநெறி பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகளோடு ஆரம்பித்த இந்நிகழ்வில் கோலப்போட்டி, தேவாரப்போட்டு, பேச்சுப்போட்டி ஆகியவற்றில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் நடனம் நாடகம் என மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் குறித்த நிகழ்வை அழங்கரித்திருந்தது.
மேலும் சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களால் பதிவு சான்றிதழும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டதோடு அதிதிகள் சிறப்புரை மற்றும் விருந்தினர்களின் ஆசியுரையோடு நிகழ்வு நிறைவு பெற்றது.
படங்கள்: தனுஷன்