Lions international District 306 B1 ஏற்பாடு செய்திருந்த “ பொங்கல் விழாவானது,கடந்த 18ஆம்
திகதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு வத்தளை- சாகர மைதானத்தில் நடைபெற்றது. இதில் லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர் லயன் ரஜித ரொட்ரிகோ மற்றும் அவரது திருமதி நடாசாஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். இதன்போது வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 31 குடும்பங்களால் 31 பானைகளில் பொங்கல் பொங்கியமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
அத்துடன் பாரம்பரிய விளையாட்டுகளுடன் தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாசார நடன நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் “பரதகலாவித்தகர்“ திருமதி. ரேணுகாதேவி நமசிவாயம் அவர்களின் “நித்யகலைக்காவேரி“ நடனப்பள்ளி மாணவர்களின் நடனங்களும் இடம்பெற்றிந்தன.










