பூட்டானில் நடைபெறவுள்ள உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
செப்டம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் பங்கேற்கவுள்ள பிரதமர், “நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வோடு எழுச்சி பெறுதல்” என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றவுள்ளார்.
இப்பயணத்தின் போது சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள பிரதமர், நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.
