கேகாலை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்பாடு செய்திருக்கின்றது,குறித்த சந்திப்பு 15/02/2025 அன்று எட்டியாந்தோட்டை சென்மேரிஸ் பாடசாலை மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம் பெறுகின்றது.
கேகாலை பிரதேசத்தில் அரச திணைக்களங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதில் இருக்கும் சிக்கல்கள் தொடர்பிலும் ,மணித உரிமை மீறல்கள் ,பாதிப்புகள் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணையாளர் மற்றும் பணிப்பாளர்களுடன் அன்றைய தினம் கலந்துரையாடுவதோடு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் .
குறித்த நிகழ்வை கேகாலை சிவனருள் பவுண்டேஷன் மற்றும் மலையகம்.lk ஒழுங்கு செய்கின்றனர்.
