Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

August 15, 2026

அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

August 15, 2026

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

August 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கேகாலை மாவட்ட பெருந்தோட்ட மக்களுடன் சந்திப்பு
Breaking

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கேகாலை மாவட்ட பெருந்தோட்ட மக்களுடன் சந்திப்பு

ThanaBy ThanaFebruary 16, 2025No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல்புன்ஞி ஹேவா மற்றும் ஆணையாளர் பேராசிரியர் தனராஜ், சர்வதேச விவகாரங்கள் பணிப்பாளர் .க.கபிலன் வில்லவராஜன்,விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் லால் வீரசிங்க அவர்களும் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் நிஹால் சந்திர ஶ்ரீ, ஆகியோர் இன்று கேகாலை மாவட்ட, பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டனர்.

இந்நிகழ்வு எட்டியான்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தில் 15/02/2025 அன்று நடைபெற்றது ,

இன்நிகழ்வில் 15 தோட்டங்களுக்கு மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தோட்ட தலைவர்கள் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கலந்துகொண்டு தமது பிரதேச மக்களின் பிரச்சினைகளை மனித உரிமை ஆணையாளர் முன்னிலையில் முன் வைத்தனர். முக்கியமாக, அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் அரச அலுவலகங்களில் தமிழ் மொழியில் சேவை பெற முடியாத நிலை தொடர்பாக கருத்துக்கள் எழுந்தன. மேலும், மதுபான விற்பனை அதிகரிப்பு, ஆபத்தான லயம் குடியிருப்புகள் மற்றும் மண்சரிவு பாதிப்புக்கு உட்பட்ட குடியிருப்புகள் பற்றி ஆய்வு செய்யுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிகழ்வுக்கு கலந்து கொண்ட மக்கள் கேகாலை மாவட்டத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கிளை அலுவலகத்தை ஆரம்பிக்குமாறு வினையமாக வேண்டிக்கொண்டனர். இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல்புன்ஞி ஹேவா கருத்து தெரிவிக்கையில் “இரத்தினபுரி மனித உரிமை ஆணைக்குழு கிளை அலுவலகத்திலிருந்து மாதம் இரண்டு நாட்கள் கேகாலை மாவட்டத்திற்கு அதிகாரிகளை மக்களின் பிரச்சினைகளை மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கை இருப்பதாக உறுதி கூறினார்.

அதேபோல், அரச அலுவலகங்களில் தமிழ் மொழி மூலம் கடிதங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெறுவதற்கான தமிழ் மொழி மூலம் உத்தியோகபூர்வ செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மற்றும் , தோட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக மனித உரிமை ஆணைக்குழு செயல்படும் எனவும் கருத்து கூறினார்.

மேலும், மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று கண்காணித்து , ஆபத்தான லயங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கும், தமது பிரதேச மக்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்காக அரச அலுவலகங்களுக்கு மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தும் என்பதையும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    கொட்டகலை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இ.தொ.கா முன்னெடுத்த கலந்துரையாடல்

    August 15, 2026

    ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. 

    August 15, 2026
    Editors Picks

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026

    கொட்டகலை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இ.தொ.கா முன்னெடுத்த கலந்துரையாடல்

    August 15, 2026

    அரசுப் புத்தகங்களை பழைய காகிதத்திற்கு விற்ற சம்பவம்: 5 பேருக்கு எதிர்வரும் 25 வரை விளக்கமறியல்!

    August 15, 2026

    அங்குலான கடற்பரப்பில் கடற்படைப் படகு விபத்து: 11 பேர் மீட்பு – ஒருவரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுப்பு!

    August 15, 2026

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் கொழும்பில் கோலாகலமாக கொண்டாட்டம் தேசியக் கொடி ஏற்றிய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.