மாத்தளை இந்துக்கல்லூரியின் மாணவன் பாகிஸ்தானில் பதக்கம் வென்றார்..
இரஜவலை இந்துக்கல்லூரியின் மாணவனுக்கு ஐந்தாமிடம்.
பாகிஸ்தானில் இன்று ( 23.02.2025 ) நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் (South Asian Athletics cross road race ) மாத்தளை இந்து தேசிய கல்லூரியின் தங்கமகன் என்று அழைக்கப்படும் செல்வன் துதிஹர்ஷிதன் இரண்டாம் இடம் பெற்று பாடசாலைக்கும் தாய் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த போட்டியில் எட்டு ஆசிய நாடுகள் பங்குபற்றியிருந்தன.
இதே வேளை திகன இரஜவலை இந்து தேசிய கல்லூரி மாணவர் விதுஷன் குறித்த போட்டியில் ஐந்தாமிடத்தை பெற்று பாடசாலைக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
