புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை படைத்த மத்திய மாகாண வத்தேகம கல்வி வலய மடுல்கலை நெல்லி மலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான பாராட்டு விழா 2025.02.25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் மருதமுத்து நவநீதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வத்தேகம கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி W.M.T.N.குணரட்ண பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.விசேட அதிதிகளாக வத்தேகம கல்வி வலய மேலதிக கல்விப் பணிப்பாளர் மௌலவி I.ஹாசிம், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அயல் பாடசாலை அதிபர்கள் கல்விமான்கள்பிரதேச வர்த்தக பிரமுகர்களும் கலந்துகொண்டதோடு கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.










