கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காபொல, தும்மலதெனிய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் 2மணி அளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
