எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் விழுந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பயணம் செய்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
