தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் பிரேரணையை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரியாவில் இராணுவச் சட்டத்தை அமுலாக்கியதன் காரணமாக அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரேரணை சரியானது என்று இன்றையதினம் தென்கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஏகமனதாக அங்கீகரித்துள்ள நிலையில், தென்கொரியாவில் எதிர்வரும் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும்.
அதேநேரம் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் சியோலில் மக்கள் குவிந்திருப்பதாகவும், குறிப்பாக யூன் சுக்கிற்கு ஆதரவான தரப்பினர் குழப்பங்களில் ஈடுபடக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
