ஊவா மாகாணம்- மொனராகலை மாவட்டம்- கதிர்காமம் கதிரமலை அருள்மிகு கந்தப்பெருமான் திருக்கோயில்
குன்றின் மேல் கோயில் கொண்டு அருள் பொழியும் குமரேசா
குறைவில்லா நிறை வாழ்வைத் தந்தருள வாராய் ஐயா
கதிரமலை வீற்றிருந்து காப்பளிக்கும் கந்தவேலா
உன்கருணை யென்றும் நாம் பெறவே அருளிடுவாய் மால் மருகா
கதிரமலை உச்சியிலே கோயில் கொண்ட குமரேசா
கவலையில்லா நிறை வாழ்வைத் தந்தருள வாராய் ஐயா
கதிரமலை வீற்றிருந்து காப்பளிக்கும் கந்தவேலா
உன்கருணை யென்றும் நாம் பெறவே அருளிடுவாய் மால் மருகா
ஏழுமலை மத்தியிலே கோயில் கொண்ட குமரேசா
ஏற்றமிகு வாழ்வு தந்தருள வாராய் ஐயா
கதிரமலை வீற்றிருந்து காப்பளிக்கும் கந்தவேலா
உன்கருணை யென்றும் நாம் பெறவே அருளிடுவாய் மால் மருகா
குறிஞ்சி நில நல்லிடத்தில் கோயில் கொண்ட குமரேசா
குற்றமற்ற வாழ்வு தந்தருள வாராய் ஐயா
கதிரமலை வீற்றிருந்து காப்பளிக்கும் கந்தவேலா
உன்கருணை யென்றும் நாம் பெறவே அருளிடுவாய் மால் மருகா
வெற்றிவேல் உடன் கொண்டு கோயில் கொண்ட குமரேசா
வேதனைகள் களைந்து நல்ல வாழ்வு தந்தருள வாராய் ஐயா
கதிரமலை வீற்றிருந்து காப்பளிக்கும் கந்தவேலா
உன்கருணை யென்றும் நாம் பெறவே அருளிடுவாய் மால் மருகா
சிவனாரின் திருக்கோயில் அருகினிலே கோயில் கொண்ட குமரேசா
சீரான வாழ்வு தந்தருள வாராய் ஐயா
கதிரமலை வீற்றிருந்து காப்பளிக்கும் கந்தவேலா
உன்கருணை யென்றும் நாம் பெறவே அருளிடுவாய் மால் மருகா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.