இந்திய-இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்திய அரசாங்கத்தின் சார்பில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
