ஜனாதிபதி ட்ரம்பின் வரி அமுல்படுத்தப்பட்டால் ஒரு வருடத்தின் பின்னர் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைகள் ஆபத்தைச் சந்திக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியு்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியினது அரசாங்கம் நமது நாட்டின் ஏற்றுமதிகள் மீது 44% பரஸ்பர வரி விதித்துள்ளது. நமது நாடு அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு 88% வரி விதித்தமையே இதற்கு காரணமாகும். இதன் காரணமாக, நமது நாடு ஏற்றுமதி விலைக்கான போட்டித்தன்மையை இழந்துள்ளது.
நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 40% அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது. இது ஆபத்தான நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பதால், சில மாதங்களுக்கு முன்பே இது குறித்து அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம். டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி மகத்தான மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவித்த சந்தர்ப்பத்தில், நான் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் சுட்டிக்காட்டி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்தேன். அதனை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
