இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்டிக்கு பிணை வழக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள வணிக வர்த்தக வளாகத்தில் வைத்து, கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட ருஷ்டி தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை (07) நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
