வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம்- கிளிநொச்சி அருள்மிகு உருத்திரபுரீசுவர் திருக்கோயில்

உருத்திரபுரீசுவரி அன்னையுடன் காட்சிதரும் சிவனே
உலகமெல்லாம் நலம் பெறவே கருணை செய்ய வருவாய்
கேடில்லா பெருவாழ்வை நாமென்றும் பெற்றுவிட
அருள் தருவாய் கிளிநொச்சியில் கோயில் கொண்ட உருத்திரபுரீசுவரப் பெருமானே

வளக் கொண்ட நன்னிலத்தில் வந்துறையும் சிவனே
வற்றாத நல்லருளை நித்தம் நமக்கருள வருவாய்
கேடில்லா பெருவாழ்வை நாமென்றும் பெற்றுவிட
அருள் தருவாய் கிளிநொச்சியில் கோயில் கொண்ட உருத்திரபுரீசுவரப் பெருமானே

தமிழ் மணக்கும் திருத்தலத்தில் இருந்தருளும் சிவனே
தெளிவான மனவுறுதி தந்திடவே வருவாய்
கேடில்லா பெருவாழ்வை நாமென்றும் பெற்றுவிட
அருள் தருவாய் கிளிநொச்சியில் கோயில் கொண்ட உருத்திரபுரீசுவரப் பெருமானே
பழம் பெருமை கொண்ட திருக்கோயில் உறையும் சிவனே
பக்தியுடன் உனை நாடும் அன்பருக்கு அருள் தந்திடவே வருவாய்
கேடில்லா பெருவாழ்வை நாமென்றும் பெற்றுவிட
அருள் தருவாய் கிளிநொச்சியில் கோயில் கொண்ட உருத்திரபுரீசுவரப் பெருமானே
அருள் தந்து அரவணைத்து ஆதரிக்கும் சிவனே
அமைதி நிறை பெருவாழ்வைத் தந்திடவே வருவாய்
கேடில்லா பெருவாழ்வை நாமென்றும் பெற்றுவிட
அருள் தருவாய் கிளிநொச்சியில் கோயில் கொண்ட உருத்திரபுரீசுவரப் பெருமானே
கேட்டவரம் தந்தெம்மை ஆட்சிகொள்ளும் சிவனே
கொடுமைகள் தடுத்தெமக்கு ஆறுதல் தந்திடவே வருவாய்
கேடில்லா பெருவாழ்வை நாமென்றும் பெற்றுவிட
அருள் தருவாய் கிளிநொச்சியில் கோயில் கொண்ட உருத்திரபுரீசுவரப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.