பசறை நிருபர்.
பசறையில் இயங்கிவரும் தோட்ட சமூக அபிவிருத்தி பணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வு பசறைப் பொது விளையாட்டு மைதானத்தில் (17.04.2025) இடம்பெற்றது. இந்நிகழ்வு நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை என். சபிலாஷ் தலைமையில் இடம்பெற்றது.
மாதோவ, மீதும்பிட்டிய, டெமேரியா ஆகிய தோட்டப் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியதோடு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு
சான்றிதழ்களும்,பதக்கங்களும் கேடயங்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் . செயற்றிட்ட முகாமையாளர் மிலான் உட்பட நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளையும் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களையும் படங்களில் காணலாம்.
