தேயிலைத் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று அட்டாம்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் அட்டாம்பிட்டிய மற்றும் பதுளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 47 வயதுடைய, பெண் தோட்டத் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அட்டாம்பிட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

