துருக்கியின் கராமன்மராஸ் பகுதியில் இன்று (13) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்க புவியியல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை துருக்கியின் தென்கிழக்கு சிரியாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த வாரம் 6 ஆம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கி – சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.
92 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நிலநடுக்கத்தால் காயமடைந்துள்ளனர். இருப்பினும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.